புதிதாக உயிர் பிழைத்து வருபவர்கள்-அருணா சுந்தரராசன்
சுற்றிலும் பனைவேலி சூழ தலைசிறந்த ஓவியனொருவன் தவமிருந்து வரைந்தது போன்ற அழகிய வீடு எங்கள் வீடு அம்மாவின் தாத்தா காலத்தில் அரிதாய்ப் பூத்திருந்த அந்த ஒற்றைச் சீமெந்து வீடு வழிவழியாய் வந்த எங்களையும் வளர்க்கத் தொடங்கியது தாத்தா காலந்தொட்டு உறவாடி நிலைத்திருந்த பழைய நினைவுகளை வீட்டின் எல்லா திசைகளிலும் உலர்த்திப் போட்டிருந்தார் அம்மா விசுவாச வேலிகளாய் உயர்ந்து நின்று தாகம் தணித்த தென்னை பனை மாமரங்கள் அக்காவின் […]